Search This Blog

Sunday, December 7, 2014

AP Raman ஐயாவின் ஆசிகள்:

ராம்குமாரின்
புதிய அவதாரம்!


பேச்சாளர் மன்றம், பண்பாட்டுக் கழகம், தமிழ்மணி பத்திரிக்கை , சமூக மன்ற நிகழ்ச்சிகள், என்று நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கும் ராம்குமார் என்ற இளைஞனுக்கு சிறுகதை எழுத்தாளர் பதவியையும் இன்று கொடுத்தது, நம் தமிழ் எழுத்தாளர் கழகம். இன்று நடந்த கதைக் களம் தேர்வில், இம்மாதத்தின் சிறுகதைக்கான முதல் பரிசை ராம்குமார் தட்டிச் சென்றார். தமிழக பிரபல எழுத்தாளர் சுப்ரஜா கலந்து கொண்டு பாராட்டியதுபோல், அவருடைய கதையில் எல்லா நயங்களும் கூடி இருந்தன. இனி வரும் கதைகளில் அவரின் கற்பனை வளங்களை மேலும் எதிர்பார்ப்போம். பாராட்டுகள்.
இன்றைய கதைக் களத்தை சுப.அருணாச்சலமும், எம்.கே.குமாரும் கலகலப்பாக நடத்தினர்.
வாழ்க்கை அனுபவங்களை சுவைத்துக் கதையாக்கும் அழகை, ரசித்து-ருசித்து கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ விவரித்தார்.
முடிவுரையில் கதை விமர்சனங்கள் அதிகம் வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டு அதற்கான பரிசுத் தொகையையும் அதிகம் ஆக்கிருப்பதாக திரு. சுப அருணாசலம் மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டார். மேலும் SG 50 என்கிற பொன்விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கட்டுரை கதைகளை அனுப்பும்படியும் கேட்டுக் கொண்டார். மேலும் 2015ஆம் ஆண்டு நடைபெறும் முத்தமிழ் விழாவில் இந்த ஆண்டின் கதைக்களத்தில் வெற்றி பெற்ற கதைகளில் இருந்து சிறந்த 3 கதைகளுக்கு பரிசு காத்திருப்பதாகவும் தெரிவித்தார். கதைக் களத்திற்கு பலம் கூடி வருகிறது.
முடிவில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்:
கதை விமர்சனம்:
முதல் பரிசு: கிருத்திகா எழுத்துக்கள் ,இரண்டாம் பரிசு: கீழை அ கதிர்வேல்
சிறுகதை:
முதல் பரிசு: ராம்குமார் சந்தானம் - இரண்டாம் பரிசு: விமலா ரெட்டி.மூன்றாம் பரிசு: கீழை அ கதிர்வேல் -- ஏ.பி.ஆர்.