தனிமையின் மீது எனக்கிருக்கும் நம்பிக்கையை பற்றி எழுதப் போவதில்லை... அது எப்மோதும் எனக்கு இருந்துகொண்டேதான் இருக்கும். ஆனால் இப்போது நான் நினைப்பது... எழுதவேண்டும் என்று என் தனிமை தூண்டியது வேறு விஷயத்தைப் பற்றி.
நம்பிக்கைதானே வாழ்க்கை... நம்பினவனுக்கு நாராயணன் ... என்றெல்லாம் பொன்மொழிகள் (?) கேட்டு பழக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்தவர்கள் நாம். அதிலிருக்கும் உண்மையை ஆராய அறிந்து கொள்ள நமக்கு யாரும் தடை விதிக்க முடியாது. நம் வாழ்க்கையின் துவக்கமே நம்பிக்கையின்அடிப்படையில்தான். இதான் அம்மா என்று நம்புகிறோம். அவள் சொல்லி அப்பா என்னு ஒருவரை நம்புகிறோம். அவர்கள் சொல்லி குரு என்று ஒருவரை நம்புகிறோம். அதன் பிறகு நாம் சந்திக்கும் ஒவ்வொருவராக நம்ப ஆரம்பிக்கிறோம். பெரும்பாலான நேரத்தில் முதலில் நம்பிவிட்டு தப்பு செய்துவிட்டோம் என்னு உணர்கிறவர்கள் தான் அதிகம் நம்பாமலேயே இருப்பவர்களைவிட.
வாழ்வில் அடுத்தவர்களை நம்பலாமா வேண்டாமா என்பதை பற்றி யோசிக்க , பேச நிறைய அக்கறையும் நேரமும் செலவிடுகிறோம்.. யாரை நம்பலாம் என்று அடுத்தவர்களுக்கு போதிக்க அதைவிட அதிக நேரம் செலவிடுகிறோம். இடை இடையே யாரோ இருவருக்குமிடையே இருக்கும் நம்பிக்கையை சோதிப்பதையும் நாம் செய்யாமலில்லை...நாம் நம்பும் மனிதன் உண்மையானவனா என்று அவ்வப்போது சோதிக்கவும் தவறுவதில்லை.... அதனால் வரும் ப்ரச்சனைகளை எதிர்கொள்ள பல நேரங்களில் நமக்கு துணிவில்லை என்பதும் உண்மை...
வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நாம் அடுத்தவர்கள் மீது வைக்கும் நம்பிக்பையைவிட நம் மீது நாம் வைக்கும் நம்பிக்கை வலிமையானது. அது எந்தவித விமர்சனங்களுக்குள்ளும் அடங்காது. யாரும் அதை சோதித்து பார்த்து குறைக்க முடியாது. நம் வெற்றிக்கான விதை அது. ஒருவரை நம்பி ஏமாந்து போனதாய் நிறைய கதைகள் கேள்விப்பட்டிருப்போம். பார்த்திருப்போம். ஆனால் தன்மீது நம்பிக்கை வைத்து உழைத்தவன் கெட்டுப் போனதாக வரலாறு கிடையாது.
தனக்கு எல்லாம் தெரியும் என்று ஆனவத்தோடு இருப்பதை நான் சொல்லவில்லை. ஆனால் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் தன்னை முன்னேற்றிக்கொண்டு நாம் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை வைத்தால் வரலாறு அதன் பக்கங்களில் நம் அனுமதி இல்லாமலேயே நம்மை நிரப்பிக்கொள்ளும். வாழ்வின் ஆதாரம் அடுத்தவர்களின் மீதான நம்பிக்கையைவிட நம் மீது நாம் நம்புவதுதான் என்று சொல்லித் தந்த இந்தத் தனிமையின் மீது எனக்கு நம்பிக்கை இருப்பதில் ஏதேனும் ஆச்சரியம் இருக்கிறதா?
மீண்டும் சந்திப்போம்.