Search This Blog

Sunday, March 27, 2011

பார்வை

சின்ன வயதில் பார்த்த சம்பவங்கள்; ஏற்பட்ட அனுபவங்கள்;  இழந்த  இழப்புகள் எதுவுமே மனதை விட்டு மறைவதில்லை... மறைய நாம் அனுமதிப்பதும் இல்லை.... அப்படி அனுமதிக்காமல் விட்டதன் விளைவாக - அன்பு செலுத்தும் காதலியை சந்தேகப்படும்  அளவிற்கு மன நோய் வந்து வாழ்க்கை எப்படி போகிறது - யோசித்தால் புன்னகை வருகிறதோ இல்லையோ அழகாக மந்திரம் சொல்லியது போல் ஒரு படம் - "மந்திர புன்னகை".... சமீபத்தில் பார்த்த ஒரு நேர்த்தியான படம்.. திரு கரு பழனியப்பனின் பார்வை.


இனி என்னுடைய பார்வை - இல்லை  பதிப்பு - இல்லை இல்லை பாதிப்பு.


மனிதனின் சிறு வயதில் இழந்ததை பெறுவது வாழ்கையின் (பாதை மாறி)  லட்சியமாகவே மாறி விடுகிறது; பார்வையும் மாறி விடுகிறது. தன் தந்தையின் குடி பழக்கத்தை பார்த்த பெண் வாழ்க்கையில் அத்தனை பேரையும் குடிகாரனாக பார்க்க ஆரம்பிக்கிறாள்... தன் கிராமத்தில், ஊரில், எங்கேயோ நடந்த நிகழ்ச்சியை வைத்து அத்தனை பெண்ணையும் வெறுக்கும் ஆண் மகன்களும் இந்த உலகத்தில் பார்க்க முடிகிறது... அவரவர்கள் வாழ்க்கையில் பார்த்த கதாபாத்திரங்களை, அடுத்தவர் மீது ஏற்று பார்ப்பதில் நாம் தயக்கம் காட்டுவதே இல்லை. 


மனைவி இப்படி இருக்க வேண்டும் (இப்போதெல்லாம் இருக்க வேண்டாம்) என்று சீரியல் பார்த்து புலம்பும் ஆண்..... அதே போல் சினிமாவில் டூப் போட்டு நடிக்கும் ஒரிஜினல் வில்லன்களை - ஹீரோக்களாக நினைக்கும் பெண்.. எத்தனை எத்தனை பேர் ? ஒன்று தெளிவாக தெரிகிறது. இது பயமுறுத்தவும் செய்கிறது - ஒருவரோடு பேசி விட்டு அவர் நல்லவர் என்று முடிவு செய்வது போய் இவர் கெட்டவர் என்று முடிவு செய்துவிட்டு பேசுவது வழக்கமாகி விட்டது.  இது ஆபத்தில் முடியும் என்பதை உணர மனமும் மறுக்கிறது. நாம் மரத்தை மரமாய் பார்க்கிறோம்; கடலை கடலாய் பார்க்கிறோம்; அனால் மனிதர்களை மட்டும் மனிதர்களாக பார்க்க மறுக்கிறோம்.


நாம் நம் உண்மையான முகத்தை காட்ட எவ்வளவு தவறுகிறோமோ; அவ்வளவு அடுத்தவர்களின் உண்மையான மனதையும் பார்க்க தவறுகிறோம்; தவறுவது இயற்கையா ? இன்றியமையாததா ?

No comments:

Post a Comment