இன்றைய வாழ்க்கையில் முள் குத்தினால், வலி போவதற்கு, மருந்து போட தயாராக இருக்கும் நாம், முள்ளை எடுக்க முயலுவதில்லை... காரணம் வலிக்கு மருந்து போடுவது சுலபம்... உடனே சரியாகலாம். பொறுமை தேவை இல்லை..
அவசரப்பட்டு வாழ்க்கையை முடித்துக் கொள்ள தயாராக இருக்கும் பல பேர் நடுவில் பொறுமையோடு வாழ்க்கையை நடத்துபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப் பார்த்தால், வாழ்க்கையில், பலர் ஏதோ ஒரு இலக்கை அடைகிறார்கள்; சிலர் விரும்பிய இலக்கை அடைகிறார்கள். வெகு சிலரே பொறுமையோடு பயணத்தை அனுபவிக்கிறார்கள்.
பொறுமை மதிப்பிற்கும் போற்றுதலுக்கும் உரிய ஒரு அறிய குணம். இன்றைய வாழ்வில் பொறுமை சாதுக்களுக்கும் சந்யாசிகளுக்கும் உரிய ஒரு குணமாகப் பார்க்க படுவது தான் அவலம். பிள்ளைகளுக்கு பொறுமை கற்றுத்தர தயாராக இருக்கும் நிறைய அம்மா அப்பா வுக்கு பொறுமை கிலோ என்ன விலை என்ற அளவில் தான் தெரியும். வாழ்வில் 4 வயதில், அப்பா 40 வயதில் சாதித்ததை எல்லாம் (சாதிக்க தவறியதை எல்லாம் கூட) பிள்ளை சாதிக்க வேண்டும். இல்லை என்றால் எதோ தெய்வ குத்தம் செய்தது போல, குழந்தையை குற்ற உணர்ச்சியில் வளர்க்க பல பெற்றோர்கள் தவறுவதே இல்லை. வாழ்க்கையே ஜெய்க்க மட்டும் தான் என்ற எண்ணத்தில் மட்டுமே வளருகின்ற ஒரு சமுதாயம் வளர்ந்து கொண்டிருக்கிறது.
பொறுமை, காத்து தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம். பொறுமை, எது நடந்தாலும் கவலை படாமல் இருப்பது இல்லை.. கஷ்டமான, இக்கட்டான சூழ்நிலையில் நாம் எவ்வளவு துணிவோடு காத்திருக்கிறோம் என்பது தான். . அதுவும் விரக்தி அடையாமல் காத்திருப்பது வெகு சிலரே.. நல்லது நடக்கும் என்ற திடமான எண்ணம். நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை.. வாழ்க்கை பற்றிய பார்வை; புதிய பார்வை; புதிய அனுகுமுறை...எதுவுமே செய்யாமல் காத்திருப்பது இல்லை பொறுமை... எல்லாம் செய்த பின், நல்லது நடக்கும் வரை இருக்கும், வெய்டிங் டைம். ஓஷோ சொல்வதைப் போல இரு நீண்ட இரவுக்குள் இருக்கும் சிறிய பகல் இல்லை வாழ்க்கை.. இரு நீண்ட பகலுக்குள் புதைந்து போகும் சிறு இரவைக் கொண்டது, என்று புலப்படும் போது தெரியும்... வேகத்தை விட விவேகம் நல்லது என்றும், பொறாமையை விட பொறுமை சிறந்தது என்று.
நம் பொறுமை, நமக்கான ஆயுதமாக, நம்மிடம் இருக்கும் வரை ஆபத்தில்லை.. ஆனால் அது அடுத்தவருடைய ஆயுதம் ஆகுமானால் பேராபத்து.
Profound thought.. but, i contradict with your last line.. - "அடுத்தவருடைய ஆயுதம் ஆகுமானால் பேராபத்து".. அடுத்தவங்க ஆயுதமா use பண்ணாலும், பொறுமை சில நேரம் அவசியம்!!! யாரு ஆயுதமா எடுத்துகராங்கன்ரத பொருத்து இருக்கு.. I remember one of my college days comedyline - "பொறுமை பொட்டுகடளையினும் பெரிது" ;-)
ReplyDelete